Afghani Chicken Recipe: ஆப்கானி சிக்கன் எப்படி செய்வது? ரெசிபி இதோ!

1 /6 முதலில் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். 2 /6 அரைத்த மசாலா விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தயிர், பிரெஷ் கிரீம், கரம் மசாலா தூள், உப்பு, சாட் மசாலா தூள், மிளகு தூள், கசூரி மேத்தி, எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 3 /6 அடுத்து சிக்கனை கீறி அதில் கலந்த மசாலாவை சிக்கனில் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும். 4 /6 கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 15 நிமிடம் பொரித்து எடுக்கவும். 5 /6 அதே கடாயில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்க்கவும் 6 /6 மீதம் உள்ள மசாலாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும். பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். ஆப்கானி சிக்கன் தயார்!

Published at : 26 May 2024 11:44 AM (IST)